பக்கம்:கோயில் மணி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணியம் ஒரிடம்

79

“யாருக்கு வேலை? இவர்களுக்கா? இவர்களுக்கு இப்பொழுது சாப்பிடுகிறதுதான் வேலை” என்றார் தொண்டர்.

“கொஞ்சம் இந்தப் பக்கமாகத் திரும்பி நில்லுங்கள். ஐயா. நீங்கள் விலகி நில்லுங்கள். அவர்களை மறைக்காதீர்கள்.” குரல் படம் பிடிக்கிறவர் ஒருவரிடமிருந்து வந்தது. அவரும் அந்தக் காரில் வந்தவர். ‘க்ளிக்!’—படம் எடுத்தாகி விட்டது. மேலும் சில படங்களை அவர் எடுத்தார்.

“சரி சரி, எல்லோரையும் நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லித் தூக்குச் சட்டியைக் கீழே வைத்தார் கனவான்; “எங்கே தண்ணீர்? கொஞ்சம் கொண்டுவாருங்கள்; கையைக் கழுவிக் கொள்ள வேண்டும்” என்று கூவினர்.

இளம் தொண்டர் ஒருவர், “தண்ணீரா? அதுதான் வெள்ளமாகப் போகிறதே!” என்று குரல் கொடுத்தார். கனவானுக்கு அதிலிருந்த ஏளனம் புலப்பட்டது. “சரி, சரி, வாரும் போகலாம்” என்று மற்றவரையும் அழைத்துக்கொண்டு காருக்கு விரைந்தார். அவர்களைச் சேர்ந்த நாலைந்து பேர்களும் போய்விட்டார்கள்; படம் பிடிக்கிறவர் உட்பட.

அன்று அந்த ஏழைகள் எப்போதையும் விட இரண்டு மடங்கு உணவு உண்டார்கள். சிலர் வீதியிலேயே படுத்துக்கொண்டு விட்டார்கள். ஆறு மணி வரையிலும் இந்த அன்னம் பாலிப்பு நடைபெற்றது. தொண்டர்கள் மனத் திருப்தியுடன் அன்று இரவில் பேசிக்கொண்டார்கள்.

மறுநாள் பொழுது விடிந்தது. பஜனை சங்கத்துத் தொண்டர் ஒருவர் கிழவரிடம் ஓடி வந்தார் : “இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/85&oldid=1383961" இலிருந்து மீள்விக்கப்பட்டது