பக்கம்:கோயில் மணி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கோயில் மணி

இருவரும் கோலம் மாறினார்கள். கண்ணன் இருபத்தைந்து வயசு இளைஞனாகவும் நாரதர் அறுபது வயசு முதியவராகவும் உருக் கொண்டார்கள். கழுத்தில் ஆளுக்கு ஒரு துளசி மாலை. நெற்றியில் கண்ணன் கோபி நாமம் போட்டுக்கொண்டான். நாரதர் பட்டை பட்டையாக விபூதியைப் பூசிக்கொண்டார்.

இருவரும் புறப்பட்டுத் தென்னாட்டில் இருந்த அந்தப் பெரிய பட்டணத்துக்கு வந்தார்கள். அங்கே ஒரு பகுதியை அடைந்தார்கள். அந்தப் பக்கம் ஒரு தெருவில் கம்பீரமான குரல் ஒன்று கேட்டது. நடுநடுவே நாமாவளியின் சப்தமும் கேட்டது. அந்த இடத்தை இருவரும் அடைந்தார்கள்.

வீதி முழுவதும் பந்தல் போட்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாகப் பெருங் கூட்டம். ராதாகிருஷ்ண படத்தை அலங்கரித்து நடுவில் ஒரு மேடையில் வைத்திருந்தார்கள். அதற்கு எதிரே பல பாகவதர்கள் அமர்ந்திருந்தார்கள். ஜாலராவைச் சிலர் தட்டினார்கள். வெவ்வேறு விதமான சப்பிளாக் கட்டையைச் சிலர் தட்டினார்கள். ஒருவர் ஜல் ஜல் என்று ஒலிக்கும் சிம்ட்டாவைக் குலுக்கிக்கொண்டிருந்தார்.

ஒரு பாகவதர் பாடிக்கொண்டிருந்தார். அவருடைய குரல் சிம்மகர்ஜனபோல் இருந்தது. அவர் பாட மற்றவர்கள் பின்னே பாடினார்கள். நல்ல சாரீரம், வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்துப் பாடினர் பாகவதர்.

“ஆஹா! என்ன பக்தி என்ன பாட்டு” என்று. நாரதர் வியந்துகொண்டு கண்ணை முடியவாறே பாட்டை அநுபவித்துக கொண்டிருந்தார்.

ஒரு பாட்டு முடிந்தது. பாடினவர் மறுபடியும் பாடுவதற்கு அடியெடுத்தார். வேறு ஒரு பாகவதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/88&oldid=1383968" இலிருந்து மீள்விக்கப்பட்டது