பக்கம்:கோயில் மணி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணனுக்குக் கால் வலித்தது

83

ஏதோ முணுமுணுத்தார். பாடின பாகவதர், “என்ன ஐயா முணுமுணுக்கிறீர்? நீர் பாட வேண்டுமா? நான் இன்னும் அரைமணி பாடிவிட்டு வேறு இடத்துக்குப் போகவேண்டும். அப்புறம் நீங்கள் எல்லாரும் சேர்ந்து அழுங்களேன், ஆர் வேண்டாம் என்கிறார்கள்?” பேச்சில் கள்ளும் கொள்ளும் வெடித்தன; இல்லை. இல்லை. இடியும் புயலும் குமுறின.

நாதர், யார் இப்படிப் பேசுகிறார் என்று கண்ணைத் திறந்து பார்த்தார். முன்பு அழகாகப் பாடின. அந்தப் பாகவதரே என்று தெரிந்துகொண்டபோது அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

நடுவிலே ஒரு கிழவர், “இவர் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறார், கொஞ்சம் பாடவிடுங்கள்” என்று ஒருவரைக் காட்டி மெல்லச் சொன்னார்.

“தஞ்சாவூரிலிருந்து வந்தால் என்ன? நேரே துவாரகையிலிருந்துதான் வந்தால் என்ன? எல்லோரும் அப்புறந்தான் பாடவேண்டும், உஞ்சவிருத்தி பஜனைக்கு ஒரு பயல் வருகிறதில்லை. கூட்டம் கூடினால் நான், நீ என்று வருகிறான்கள்! இந்த ஓர் ஆசாமியே எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது” என்று சொல்லிப் பாகவதர் மார்பில் ஓர் அடி அடித்துக் கொண்டார். ‘நான் என்று மார்தட்டும்’ மகாவீரம் அது

நாரதருக்கு நடுக்கம் கண்டது; ‘துவாரகையிலிருந்து தான் வந்தால் என்ன என்று இவர் சொல்கிறாரே! நம்மைத் தெரிந்துகொண்டிருப்பாரோ?’ என்று கொஞ்சம் துணுக்கங்கூட உண்டாயிற்று. கண்ணனைப் பார்த்தார். அவன் நாரதரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிப் புன்முறுவல் பூத்தான். நாரதர் அருகில் சென்று, “நாங்கள் துவாரகையிலிருந்தே வந்திருக்கிறோம் பாடவேண்டும் என்று சொல்” என்று பணித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/89&oldid=1383972" இலிருந்து மீள்விக்கப்பட்டது