உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோவூர் கிழார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அணிந்திருக்கும் அடையாள மாலையாகிய ஆத்தியையே அவனும் கண்ணியாக அணிந்திருக்கிறான். இரண்டு பேரும் போர் செய்து, ஒருவர் தோற்றுப்போனால், ‘சோழன் தோற்றான்’ என்றே உலகம் சொல்லும். வெற்றி யாரேனும் ஒருவர் பங்கில்தான் இருக்கும். ஒருவர் வென்றால் மற்றவர் தோற்பார். தோல்வியுறுபவன் நெடுங்கிள்ளியாக இருந்தாலும் அவன் வந்த குடிக்கு அது தோல்வி; அந்தக் குடி உங்கள் இருவருக்கும் உரிய சோழகுலமல்லவா?”

நலங்கிள்ளி வியப்பில் ஆழ்ந்தான். புலவர் பெருமான் சோழர் குடிப் பெருமையிலே கருத்தூன்றிப் புலவர் குடிக்கு நேர்ந்த துன்பத்தை மறந்து விட்டாரென்பதை எண்ணியே வியந்தான்.

“யோசித்துப் பாருங்கள். சோழர் குடிப் பெருமை மிகமிகப் பழங் காலமுதல் வளர்ந்து வருவது. இதை அழிப்பது முறையன்று. கொண்டும் கொடுத்தும் உறவை வலிமைப்படுத்த வேண்டும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. நெடுங்கிள்ளி தங்களைக் காட்டிலும் ஆண்டில் முதிர்ந்தவன். இன்னும் சில ஆண்டுகளே வாழ்வான். அதுவரையில் அவன் அமைதியாக வாழும்படி நாட்டின் ஒரு பகுதியில் அவனை நிறுவி ஆட்சி புரியச் செய்யலாம்; அவனும் பதவி மோகத்தால் விளைவதை எண்ணாமல், அறியாமையால் ஏதேதோ செய்துவருகிறான். ஒரு குடியிற் பிறந்தவர்கள் தமக்குள் முரண்பட்டுப் போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/69&oldid=1111099" இலிருந்து மீள்விக்கப்பட்டது