பக்கம்:கோவூர் கிழார்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

நன்மைகளையும் நன்கு உணர்ந்து அவரைப் போற்றிப் பாராட்டி வணங்கினான்.

சில ஆண்டுகளில் நெடுங்கிள்ளி இறந்தான். காரியாறு என்ற இடத்தில் அவனுக்குச் சமாதி கட்டினார்கள். அதனால் அவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியென்று பிற்காலத்தார் வழங்கினர்.


8
கவிச் செல்வம்

சோழ மன்னன் நலங்கிள்ளி பகைவர் யாரும் இன்றி அமைதியாக நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய அவைக்களப் பெரும் புலவராகக் கோவூர் கிழார் வீற்றிருந்தார். பாணரும், பொருநரும், கூத்தரும், புலவரும் வந்து தங்கள் கலைத் திறமையைக் காட்டிப் பரிசில் பெற்றுச் சென்றனர்.

கோவூர் கிழார் பல பாக்களைப் பாடினார். அவருடைய கவிதையைக் கேட்டுச் சோழன் இன்புற்றான். ஒரு பாணனை நோக்கி மற்றொரு பாணன் பாடியதாக ஒரு பாட்டு இருக்கிறது. யாரேனும் மன்னரிடத்திலோ செல்வரிடத்திலோ பரிசு பெற்ற பாணன் ஒருவன் வழியிலே சந்தித்த மற்றொரு பாணனைக் கண்டு, “நீயும் அவனிடம் போனால் பரிசில்களைப் பெறுவாய்” என்று சொல்லி, அந்த வள்ளல் இருக்கும் இடத்திற்குப்