பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் துன்பக் காட்டினில் இன்ப மலர்ச்சியாய் என்பிலா கங்கையென் ஏழ்மைக் கிரங்கி அன்பினல் அதிர்த்துடன் அலேகளை அனுப்பும் என்பெரும் புக்கக இருப்பிடங் கண்டே, ஆர்வம் பொங்கிட அசைந்தே நகர்ந்து சோர்வெலாம் விலகிடச் சேர்ந்தேன் அவ்விடம்; சார்வதால் நன்மையே சாருமென் றெண்ணினேன்; ஊர்வலம் வந்ததில் உற்றதே பெற்றனே. நல்லார் நாவினில் நனைத்திடில் துப்புவர்; வல்லார் பலரிடம் வணங்கும் வேலையோர்; கல்லார் கூட்டம் கற்றரை ஒதுக்கலாய்ப் புல்லா தென்னேயே நிறுத்தினர் புறத்தே. தனித்து நின்றதால் தக்கஒய் வெடுத்தேன்; இனித்தடை இல்லையென் றிரும்பெருங் கருகிற கணித்துவர்க் கடலும் நன்றெனச் சேர்த்தது: குணித்துத் திரையுடன் குலவினேன் பேசியே. 100