பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் படிக்கின்ற மாணவர்க்குத் தோழர் காள்:நீர் படிப்புணர்ந்தோர் ஆயிடினும், ஊரின் மூலை முடுக்கெல்லாம் பதம் பார்ப்போ ராயி னும்கண், முகம்மறைக்கும் இரவுவரின் நண்பன் தன்பால் வெடுக்கென்று போய்ப்படிபோ என்றே சாற்றி வெருட்டிடுவீர் விளேயாட்டு நேரம் வந்தால், துடுக்காய்ச்சென் றிழுத்துவந்து தழுவி கின்றே தோழனுக்கு நல்லவனுய்த் தோள்கொ டுப்பீர்! புதுமையாய் யானென்றும் புகன்றே னில்லை: புரிந்ததற்கே கவிதைமெரு கேற்றித் தந்தேன். இதுகிகழ்ந்தால் இளைஞர்கிலே உயர்ந்தி டாதோ ? இனியவரே, இயற்றிடுக! மாண வர்காள்: முதுநாட்டின் விழுதுகளே விடியற் போதில் முனைகின்ற படிப்பதுதான் வேராய்ப் பாயும்: அதுகொள்க ! தாய்நாடு சிறக்க, விேர் அருந்தொண்டு செயல்வேண்டும்; அறைவன் கேளிர் : 112