பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் தலைவி : அத்தானே! அன்பூறுங் தமிழத் தேனே ! "அடுக்காது சாதிவிட்டுச் சாதி போதல்; செத்திடவா வாழ்ந்திடவா", என்ருள் அன்னை. "செத்திடுபோ' எனச்சொல்லித் தடைநீக் கிட்டேன்: சொத்தில்லை, அப்பனில்லை' என்றர் தந்தை; சொத்தையுங்கள் பேச்சென்று சொல்லி வைத்தேன்; இத்துணைக்கும் மேலாக என்தாய் மாமன் எதிர்த்துவந்தார்: எடுத்தெறிந்தித ஏசி விட்டேன். தலைவன் : - தடையென்ன இனிக்கண்ணே ? தளர்ச்சி யென்னே ? லேவி : - த தமிழ்த்தாயின் முகங்கண்டேன், தளர்ந்து போனேன். படைபடையாய் வடபுலத்தார் பலமு னயில் பயிரழிக்கும் விட்டிலெனும் பழுதார் இந்தி நடைமுறையில் திணிக்கின்ருர், கலிவே செய்வார். நந்தமிழ்த்தாய் தாழ்ச்சியொடு நறுந்த மிழ்நர் அடைந்துள்ள பெருந்தாழ்வை அகற்று முன்னர் அத்தானே, நமக்குமொரு திருவாழ் வுண்டோ ? 136