பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பேராசிரியர் கோ. சுப்பிரமணியனர் M.A., B.1. (ஆராய்ச்சித் துறைத்தலைவர், அண்ணுமலைப் பல்கலைக் கழகம்.) வழங்கிய மதிப்புக் கருத்துரை : வளஞ்சேரும் விண்ணிலே பிறந்தமதி மறைவதுண்டு, வண்டமிழான் வளர்கோவை இளஞ்சேரன் எண்ணிலே பிறந்தமதி எந்நாளும் மறைவதிலே; இன்கனியாய் உளஞ்சோரும் போதெல்லாம் உதவிவந்து ஊட்டமுற உவகை யூட்டும்; பழஞ்சோற்றை யுண்ணுகினும் பக்கத்தில் அப்பளமாய் இப்பழமும் படைக்கும்பாரே ! (ஒ-ம். கோ. சுப்பிரமணியம். மறைந்தோ போவாய் ! "முழுநிலவே, விண்ணகத்துத் தங்கத் தட்டே: முதிர்காதற் குமரியவள் முகத்திற் பூக்கும் எழிலுருவே" என்றுன்னைக் கவிஞர் பாடும் ஏற்றங்கேட் டதற்கலர்ந்த முழுநி லாவே ! "எழுதரிய விண்ணகமோர் எண்ணெய்ச் சட்டி: எழும்முகிலோ நுரையாகும்; அதிலே நீயோ சுழிகின்ற அப்பளமாய்ச் சுழல்வாய்' என்ருல் சுடப்பட்ட மலரெனவே சுருண்டோ போவாய் ? 145