பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 'அன்ருெருநாள் அவளுதட்டில் முத்தம் பாய்ச்ச அனைத்தவுடன் குனிந்ததலை கிமிர்த்தத் தொட்ட மென்முகவாய் விளிம்புருவே என்றே காதல் மேவியவர் சொற்கலர்ந்த அரைகி லாவே ! "சின்னவொரு பொடியனவன் தின்னக் கொண்ட சிதலெடுத்த காரத்தஞ் சுளை'ே என்ருல் கன்றிப்போய் உடல்தேயக் கருகித் தீய்ந்து கருங்காரின் வாய்ப்பட்டுக் கவிழ்ந்தோ போவாய்? 'பிறைநிலவே, பிரித்தெடுத்த உதடே போல்வாய் ! பிஞ்சுடல்கொள் ளமுதமொழிப் பசுங்கு ழங்தை நிறைநுதலின் உருவுடையோய்' என்றே பல்லோர் நிற்புகழ அதற்கலர்ந்த நிலாப் பிறையே : "குறைவுற்றுத் தேய்ந்திட்ட இலாடம் நீயே: குப்பையிலே கிள்ளியெறி நகமே போல்வாய்: உறையெடுத்த சிறுவாளே என்றே உன்னை உரைத்திட்டால் உடலழிந்து மறைந்தோ போவாய் ? (எண்சீர் ஆசிரிய விருத்தங்கள். ) 146