பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதைகள்



தலைவி :

தேங்குழலைக் கேட்கின்ற பருவ மன்று:
தேவைகொண்ட இன்பமதோ அத்தா னன்றித்
தாங்குதங்தைக் கேலாத தன்மை சாற்றித்
தாழ்திகைப்பை நகைப்பாக்கத் திரும்பிப் போடி !

தோழி :

உனப்பிரிந்து துணையறியா எனப்பி ரிந்தே
உளம்வாடச் செய்தனையே கானென் செய்வேன் :

தலைவி :

எனைப்போல நீயு மொரு துணையை நாடி
எழில்குவிக்கும் இன்பத்தை எய்தப் போடி !

தோழி :

நனையாமல் கரியதனை நீராட் டல்போல்
நயமான மாற்றமெலாம் நவின்றாய், நன்றே:
'புணைநீயே வாழ்க்கைதனக் கென்றுன் மாமன்
புரிந்துவரும் செயலதனைப் புகன்றால் சோர்வாய்.

'என்னருமைக் கன்னிதனை இட்டுச் சென்ற
எத்தனைநான் சாடிடுவேன்' என்றே கூறித்

13