பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். வனப்பார் மலைசேர் வஞ்சிக் காண்டம் வழங்கும் புகழ்மை வகைசேர் பொருளில் சினப்போர்த் தமிழன் சிறப்பிற் புறமார் சீற்றம் மிளிரும்: ஏற்றம் ஒளிரும். மூவர் மன்னர் முடியர் தமிழர் மும்முனை யதுவாய் முனைந்தார் பிரிவில்; பாவார் சிலம்பாம் பாட்டில் மூவர்ப் பொதுமை திகழும்: புதுமை நிகழும். பெண்மைக் குயர்வைத் தண்மைப் பொருளால் பெருங்காப் பியமாய்ப் பேழைச் சுவையாய், உண்மைக் கலையாய், உயர்பொன் குவையாய், உலகிற் புகழாய் உலவத் தந்தான். மலர்க்கண் ணகியைப் புகார்க்காண் டமதில் மழலை மகளாய், மதுரைக் காண்டத் தலர்பேர் *அணையாய், அருவஞ் சிதனில் அணங்கார் நறுதெய் வதமாய் அமைத்தே.

  • அனே - அன்ன.

61