பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். கொண்ட தொழில்முற்றிக் கொள்ளும் பயனள்ளி : அண்டத் துயிருக் களித்து மகிழ்ந்தபின் உண்ட உணவே உவப்பாம், இனிப்பென்று கண்டார் களிபொங்கல், கன்னல், கதலி,பால் தண்டாச் சுவைகொள் தமிழமை பொங்கலாய்: உண்டோ உலகிலிதற் கொப்பென்பார் போன்றே. வெம்மை தணிய வேண்டுநம் நாட்டிற்குத் தண்மை தருந்திங்கள் தைத்திங்கள் அன்ருேகாண் ! செம்மை பிறக்கச் செழுங்தை பிறக்குமென்பார்: நம்மை மகிழ்த்தி நறுவாழ்வைத் தோற்றுகின்ற கொம்மைத் தைம்முதலைக் கொள்ளுவம், புத்தாண்டின் சும்மைப் புதுநாளாய்: சுவைப்பம் தமிழ்ச்சுவையே. 67