பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் பிழையில் லாத உச்சரிப்பும், பிறழ்வில் லாத எழுத்ததுவும், விழைவாய்த் தமிழைக் கற்பதுவும் விளங்குங் தமிழ்க்கே தொண்டாகும். புழைவாய்ச் செடியாய்த் தமிழ்வாடப் புன்மைச் சில்லோர் கீழறுப்பாய் நுழைவார் செயலை நூக்குதலும் நுவலுங் தொண்டென் றுணர்வாயே! அடுத்து வந்தோர் அடாப்பழக்கம் அவ்வப் படியே கடைப்பிடித்துக் கெடுத்தே விட்டாய் தமிழ்வழக்கே ! கேலி'க் கிடமே கொடுத்திட்டாய் ! படுத்தல் ஒன்றிற் பணிவதன்றிப் பணிதல் ஒரும் தமிழா, கேள் ! எடுத்தே யுள்ளாய் என்பதன்றிக் கொடுத்த துண்டோ: இதுகன்றே *