பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கோவை. இளஞ்சேரன்

திருப்பதைக் காணலாம். ஏதோ நேற்றுத்தான் மாற்றம் ஏற்பட்டதென்பதில்லை. ஆனால், ஒரு வேறுபாட்டைக் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டாயிரம் ஆண்டு, காலப் பகுதியில் கவிதைகளில் புதிய மரபுகள் உருவாயின. ஆனால், புதுக்கவிதைகள் என்று இன்று கூறப்படுபவை பழைய மரபுகளின் கீழ் வருபவையல்ல என்பது மட்டுமன்று; அவை புதிய மரபுகளை உருவாக்குபவையுமல்ல. எனவே, அவை மரபில்லாத கவிதைகள்'. இந்த அணுகு முறையில்தான் கவிஞர்கோ கோவை இளஞ்சேரனின் கவிதைகள் மரபுக் கவிதை வழியைச் சார்ந்தவை என்கிறோம். மற்றபடி கவிஞர் கோவை. இளஞ்சேரன் புதுமை அறியாதவரல்லர்: புதுமை படைக்காதவரல்லர்.

புலவர் கவிஞராக மலர்ந்த பான்மை நூல்தொறும் தெரிகிறது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளைப் புலவர் கோவை இளஞ்சேரனின் கவிதைகள்', 'கவிஞர் கோவை. இளஞ்சேரனின் கவிதைகள்' என இருவகையாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில் வரக்கூடிய கவிதைகளில் அவற்றின் யாப்புவகையை ஆங்காங்கே குறிப்பிடுகிறார். இலக்கண ஆய்வுக்கு ஈடுபடுத்தப்பட வேண்டிய சொல்லாய்வுகள் பல கவிதைப் பொருள்களாக இடம் பெற்றிருக்கின்றன. பல கவிதைகள் இவ்வகையின.

இதேபோல பல நீதிகளை, அறிவுரைகளைக் கவிதை வடிவில் சொல்கிறார். பள்ளி நாற்பது, மாணவர் பத்து, நிறைப்பத்து முதலிய தலைப்புகளில் வருபவை இவ்வகையைச் சேர்ந்தவை. * . シ - .

"நகத்தைக் கடித்தல் நகைப்புக் குரித்தாம்

நகத்தின் அழுக்கொரு நஞ்சு'

[8]