பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

மக்கள் விழி,உடல் பட்டு-மலை மண்ணில் இணைந்ததால் கெட்டு, தொக்கநீர் உண்ணாது தள்ளி-வானம் தூவிடும் முத்தென உள்ளி, நக்க முழுமதி உருகி-வழி நற்றுளி அமுதெனப் பருகி, சொக்கு குரலடைந் தாயே-இணை

சொல்ல வழியடைத் தாயே!

178

கொல்வி மலைசேரத் தாவி,-உயிர் கொல்லும் இசையினில் கூவி, செல்லும் வழியினில் தோற்பாய்;-ஒரு செல்வி குரலுக்கு வேர்ப்பாய்! கெல்லியென் உயிரில் பாதி-வாரிக் கொண்டவள் அவளென் தாதி, மெல்லியல் தனக்குச் சேதி-இசை மெருகொடு சொல்லிப் போதி!

| 79

103