பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உள்ளுணர்வின் ஊற்றுக்கண்,

உயர்நோக்க நாற்றங்கால், உண்மை நன்செய், தெள்ளுபொருள் கதிர்மணியாய்த்

திகழ்சங்கத் தமிழ்நூல்கள் திகழக் கண்டேம்; அள்ளுறும் இவையுண்டால்

அன்பூறும்; பண்பூறும்; அறிவே ஊறும்; ஒள்ளியகா தல்,வீரம் #

உடனுறும்; இடையூறே ஊறல் காணேம்.

| 85

பலமொழிகள் பயில்வதனால் -

பரந்தறிவு பெருகிவரும்; பயனும் உண்டாம்; கலவைமொழி ஆக்காமல்

கற்றிடுதல் எம்மொழிக்கும் காப்பே கண்டேம்; உலவுமொழி அரபிதனில்

ஒருசொல்லிற் பிழையெனினும் ஒவ்வார்; சோர்வார். குலவுமொழித் தமிழதனைக்

குலைத்துவரும் பிழைக்கென்று குலைவோ காணேம். |86

109