பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

வீட்டுணர்வும் நாட்டுணர்வும்

உடலுணர்வும் உறவுணர்வும் ஒன்றாய்க் கூடி மாட்டிடினும் வகுப்பறையில்

மாணவர்தம் முகம்பார்த்தால் மறையக் கண்டேம்; பாட்டதனைப் பொருளதனைப்

பதமாக வழங்கிடுங்காற் பட்டி மாடாய்த் தேட்டையிடும் மாணவனும்

தேன்வண்டாய் மாறாமல் திகைத்தல் காணேம்.

223

முத்தெடுத்துச் சாறெடுத்து

முறுவலுடன் கொடுக்கின்ற முறைபோல், நல்ல

பொத்தகத்தில் உலகியலில் -

பொதிந்துள்ள பூட்டகத்தைப் புதிரை, பூத்த

கொத்தெனவே எழுத்துருவில் .

கொடுக்கின்ற பணிசீரைக் கொடுத்தல் கண்டேம்; அத்தகவுப் பணிநிலைத்த

அரும்பணியாய் என்றென்றும் அழிதல் காணேம்.

224

|28