பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இனப்பகைக்கோர் எதிர்ப்படைதான் கல்விக் கூடம்;

இல்லார்க்குப் பெரும்புதையல் கல்விக் கூடம். சினப்பகைக்குச் சிறைக்கோட்டம் பள்ளிக் கூடம்;

சிறார்க்கெல்லாம் சிறப்பிதழாம் பள்ளிக் கூடம். மனப்பகைக்கு மருத்தகமாம் கல்விக் கூடம்;

மருண்டவர்க்குத் தெருண்டவிடம் கல்விக் கூடம்; குணப்பகைக்குக் குழிநெருப்பாம் பள்ளிக் கூடம்;

கூடமெனிற் குறையற்றோர் கூடும் கூடம்.

246

குருடர்க்கு விளக்கொளியாம் கல்விக் கூடம்;

கூன்செவிடர்க் கின்னிசையாம் கல்விக் கூடம். திருடர்க்குத் திருப்புமையம் பள்ளிக் கூடம்.

திக்கற்றோர் திசைகாட்டி பள்ளிக் கூடம். "பொறியின்மை பழியன்றாம்” எனுங்கு றள்கொள்

பொருளதனின் உருவகமாய்ப் பொலிந்து நிற்கும் உருவார்ந்த மாளிகைதான் கல்விக் கூடம்.

உலகினர்க்குப் பெருங்கோயில் கல்விக் கூடம்.

247

I4]