பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உள்ளந்தான் நல்லடுப்பாம்; உணர்வே தீயாம்; உயர்தமிழே ஆவின்பால், உவகை தேனாம்; வெள்ளைத்தாள் புதுப்பானை, விழைவே வெண்ணெய், விளைகருத்தே கற்கண்டாம்; அணிகள் பாகாம்;

ஒள்ளியநல் எழுத்தரிசி; சொல்லே சோறாம்; ஒளிர் நயங்கள் மணப்பொருள்கள்; ஒர்தல் யாப்பாம்; தெள்ளித்தான் வருஞ்சுவைகள் கனிகள், கன்னல்; தேர்ந்தமைத்துப் பொங்கிடுவோம், கவிதைப் பொங்கல்.

357

காப்பியங்கள் பல படைப்போம்; காப்பி யத்துள்

கற்பனைகள் கலைச்சுவைகள் அளவாய்ப் பெய்து

காப்பளிக்கும் வாழ்வியலின் கவின்சுக் கானாம்

கலைப்பொறியோ டறிவியலும் பூத்துக் காய்க்குத் தோப்பெனவே காப்பியங்கள் தொடுப்போம்; நந்தம் தொல்காப்பி யத்தமைந்த மொழியி யல்பாம் . G575೧uನುಣTು ಹ6767ಹಹಹ ಅಳrpಹಿ Burirಿ, கோலமொழிச் சொற்பெருக்கிக் குவிப்போம், பொங்கல் 358

| 83