பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

அன்னமே, வற்றாத காவிரித் - தண்ணீர்

வழிக்குக் கரையெடுத்த வல்லமைக்கு மேலா மொழிக்குக் கரையெடுத்தோன் உள்ளான்; - கழிக்கின்ற கல்லால் அணையமைத்தான் காலன்; அழிந்திடாச்

சொல்லால் அணையமைத்தான் காப்பியன்; - மெல்லக் (20) கரையும் கரையெடுத்தோன் மன்னன்; கரையாக்

கரையெடுத் தோன்சொற் புலவன்; - புரையும் கதையளக் காமலே காப்பியம் செய்தான்;

விதையெனச் செந்தமிழ் வித்தித் - துதையும் தமிழுக்குக் காப்பின் இயம் என நின்றே (25)

இமிழ்கடல் நானிலத் தீன்றோன்:- அமிழ்தெனும் ೧57ುಹT பியனெனத் தன்பெயர் தோற்றியே

தொல்காப் பியநூலைத் தோற்றினோன் - மல்குநூல்;

நந்தாய் மொழிக்கொரு நாடி, ஒளிதரும்

நந்தா விளக்கது கோடியாம் - முந்திச் (30)

சிதைக்கும் பகைக்கது காப்பு; பதித்த

சிதைவிலா முத்திரைக் கோப்பு - விதையாய்

189