பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

52. மக்கட் பூண்டு.

மலையில் முளைத்தது மக்கட் பூண்டு; தொலைகடற் பரப்பெலாம் தொடர்ந்ததப் பூண்டே. அப்பெரும் பூண்டோ அருந்தமிழ்ப் பூண்டெனச் செப்பினர் உயிரியல் செம்மைகொள் அறிஞர்.

முளைவெடித் தெழுந்து முளைத்தவப் பூண்டு (5)

தளிர்த்தும், கிளைத்தும், தழைத்தும், முகைத்தும், மலர்ந்தும், சுரந்தும், மணந்தும், மறிந்தும், கிளர்ந்தும், காய்த்தும், கனிந்தும், விதைத்தும்

பரவிய கதையோ விரவியே பெருகும்.

அவ்வழி,

முதற்பெரும் மக்களின் முதல்வர் தோன்றி (10) முற்கியும், கனைத்தும், முனகியும், கூவியும்,

சொற்குறிக் கொலித்தும், சொல்லுரு வாக்கியும், ஒருசொற் கொண்டே ஒண்பொருள் பெருக்கியும் திருமொழி எனுந்தமிழ்ப் பெருமொழி படைத்த

திறம்எனும் முதல்அதி காரம் தெரிப்பன்: (15)

209