பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கடத்தற் கல்லதால் கடலே'; ஆழ்ந்த ஆழம் உடைமையால் 'ஆழி'; மூன்று மழை, ஆற் றுாற்றுநீர் மருவலின் முந்நீர், நவிப்பொலி தருங்கடல் நரலை': வாய்பெறும் உவர்ப்புச் சுவையதால் உவரி'என் றுலகில் அழைத்தனர்;

இவ்வா றருஞ்சொல் லமைத்த அழகை, அறிவை அளக்க ஒண்னுமோ?

மலையும், காடும், மண்வள வயலும், நிலைத்த உலகதாம் நானிலம் தன்னில்

பல்கிப் பெருகிய ஒல்காத் தமிழ்க்கடற் சொற்களில் ஒருதுளி சொற்றனன்; முற்றக் கற்றல் நமக்குக் கடனாம்;

கற்க, கசடறக் கற்பவை; நிற்கவே!

(70)

(75)

(78)

383

(நேரிசை

2|3

ஆசிரியப்பா)