பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

நம்பி;

குலவிஎன்னுடன் கலவிகண்டஉன் இனியமெல்லுடல் பொலிவுகொண்டிட வயிறுவாய்த்தனை;

பொங்குநின்னடை இசையுவஞ்சியின் கொடி,அசைவென

அசைந்தசைந்ததே; 'அசைதல் என்பதற் கரியசொல்லது 'தூங்கல்'என்ப

தாம்;

துரங்கலோசையில் துளங்குவஞ்சி"யாம்

பாவையாயினை; எனவே,

வஞ்சிப் பாவை நீ வாழ்க!

வஞ்சிப் பாவிது, வஞ்சிக் காதே. 393

நங்கை:

இன்ப மருட்கை உனக்களித்தேன் என்றோ நீ அன்பு மசக்கை எனக்களித்தே இன்பளித்தாய்? ஒன்று கிடைத்திட்டால் ஒன்றுதவும் சீர்பெற்றாய்; வென்று வளத்தில் விளங்குக - பண்பாளா! என்றே,

மருட்கை கொண்ட மங்கை மருட்பn' சொன்னேன், மகிழ்ந்தேற் பாயே!

394 (வியனிலை மருட்பா)

220