பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கலையாமல் மனத்தினிலே மரபுவழிக் கவிதையதோ உரமாகி நிலைத்துவிடும்; நாட்டமுள்ள அறிவிற்கும்

ஊட்டஉண வாகிவிடும்.

உண்டஉணா செரிப்பதற்கும்,

தொண்டைக்கணிச் செவ்வாய்க்கும்

வெற்றிலை பாக்கு சுண்னமாம் தம்பலம்

உற்றதோர் இனிப்பு மருந்தாம்; அதனால், தம்பலம் எனப்புதுக் கவிதையைச் சொன்னால் அம்பலம் ஏற்குமே, அருந்தமிழ்ப் பெண்ணே! நம் புதுக் கவிஞரும் நலமெலாம் சூழப் தென்புலம் வளர்க்கும் தெளிவொடு

பம்புசீர்ப் புகழில் பரப்புக தமிழே!

- 404

(வஞ்சிக் குறும்பாட்டு]

நங்கை: -

நன்னனனே நானனனே நன்னானே நன்னனனே நன்னனனே நானனனே நன்ன நன்ன நன்னானே

225