பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

காற்றெனுங் கூற்றுவன் காலால் உதைத்துத்

துாற்றியே தள்ளித் து'வென் றுமிழ நாற்றிசை எங்கணும் நாயாய்த் திரிகையில்

மாற்றிலா அன்புகொள் மலைகண் டனுகியே,

525 'அன்னாய்’ என்றவள் அருந்தாள் நோக்கினேன்;

'பெண்ணே என்றெனைப் பொறுத்தனள் தலைமேல் தன்னேர் இலாத தாய் மடிக் குழவியாய்த்

துன்னியே படிந்து தூங்கினேன் அயர்ந்தே.

526 வெப்பத் தினாலே வெந்ததென் உடல்எனச்

செப்பியே “கருநோய் செகுத்திட அன்னையும்

ஒப்பியே அழைத்தனள் உயர்தண் தென்றலை; தப்பா தடைந்தெனைத் தழுவியே நின்றதே. உண்மை ஒளியால் பொய்யிருள் அகறல்போல், 527 திண்மை பிறந்ததுந் திகைப்பெலாம் அறுதல்போல் தண்மை அணுகவுந் தீநோய் பறந்திட

வெண்மை பெற்றுடல் வெலவெல’ப் படைந்தே,

528

• • • • • • • • • • • • • • * * * * * * * • • • • • • • • • • • • • rهن - «۰

கருநோய் - கருப்பம்; கருமையாகிய நோய்.

284