பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

அலரும் மலரார் அருமைப் பொழிலாம்

அன்னைத் தமிழின் அழகார் முகமே, மலரும் வேனிற் கானல் வரியால்

மகிழ்ந்து மலர்ந்து நெகிழ்ந்தே அருளும். 57 | தமிழ்ப்பண் பதனைத் தமிழ்ச்சி ரதனைத்

தகுதிக் குரிய தளங்கள் தெரிந்தே கமழப் புரிந்த கவினைப் 'பீடன்'

றெனுஞ்சொல் லீன்றே, வனைந்தான் சான்றே.

572 நிமித்திகக் கயவர் நிகழ்த்திடு மயல்கள்

நிலைகுலைந் தழுங்கக் குலைநடுக் குலுங்கத் துமித்தெறி மறவன்; துறவுகொள் அறவன்; துகளறு புலவன்; திகழ்தமிழ் வலவன். இல்லறச் செல்விக் கொல்காக் காப்பியம் 573

இயற்றிய துறவோ டிசைத்ததற் திறவன் பல்லிசைக் கலையும், பல்லியக் கூத்தும்

பகுத்துத் தொகுத்து முகிழ்த்த அகத்தன். 574

  • பீடு அன்று - பெருமைக்கு உரியது அன்று.

298