பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தாய்த்தமிழ் உணர்ச்சியில் பூத்த புதுமலர்; பாட்டுணர்ச் சியிலே பதித்தாய் உயிரை; நாட்டுணர்ச் சிக்கோர் நாளத் தண்டு; "பாரத நாடு பழம்பெரும் நாடெனத் "தமிழ்த்திரு நாடு தாய்'என, அஃதோ (55) 'அமிழ்தின் இனியது, ஆன்றோர் நாடென

நாட்டினாய் நாட்டுப் பற்றில் தனிக்கொடி.

வேடிக்கை மாந்தரை வெருட்டினாய்; பெண்மை

வாடிக்கை மாடெனக் வாட்டிய ஆண் திமிர் * "வெட்டிவிட் டோம்' என வெடித்தொரு கும்மி (60) கொட்டிடத் தாய் உல குயர்த்திய சேய்,நீ.

கடவுள் உணர்ச்சியில் கலங்காக் கணிc. உனைப்பா டும்யான் உணர்வோ கருத்தோ கடவுள் என்பதில் காண்கிலேன் எனினும் விடேன் உன் கவிதையில் வெடிக்கும் சுவையினை. (6.5)

"மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலி காள்' என 'அறிவே

தெய்வம்'என் றுரைத்த தினவுக் கவிஞ!

307