பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டேன்; நன்மை போதிக்கும்" என நீ நம்பினும்

புராணம் பொய்யெனப் பொரிந்து தள்ளினாய்.

பாடல்ஒவ் வொன்றும் ஆடகப் பைம்பொன்;

நூல்ஒவ் வொன்றும் நூறுவை ரக்கல்;

தேசியப் பாடல் வீசிய புயலே; 'தெய்வப் பாடல் பெய்த ஆன் மிகமழை; ஆன்மிகப் பாடல் வான்வெளித் தூது; தாய்மொழிப் பாடல் வாய்மொழி வைரம் குமுகாயப் பாடல் குமுறிய குரலாம்;

இயற்கை வண்ணனை மயக்கும் கன்னி; குயில்பாட் டால்நீ கவிதைக் குயிலே; பாஞ்சாலி சபதம் நீஞ்சுவைச் சூடு; ஆத்தி சூடி பூத்த புதுமை;

சான்றோர் புகழ்ச்சி ஈன்றாள் உணர்வாம்; அறுபத் தாறும் நிறுவுநெட் டுயிர்ப்பு: உரைப்பாட்டு மடைகள் விரைமலர்க் கொத்தாம்;

கட்டுரைப் பாங்கெலாம் கதிர்நெற் குவியல்;

309

(96)

(95)

(100)

(105)