பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வயிரத்துள் சந்தனத்தில் பிசைந்து,

வாகைமலர் இழையெடுத்துக் கலந்து, வயல்வளத்தை வாகாக விதைத்து,

வகைவகையாம் ஐம்பொன்னும் வகுத்து, வெயிற்சூட்டில் வார்த்தவார்ப் படத்தை

வெல்வேலால் கடைந்தெடுத்த வடிவில் இயற்றமிழை இயக்கிவிட்ட உயிர்,என்

எழிலோட்டந் தனில்,அவராய் இழையும்.

முல்லைக்கு மணமேற்றும் உடலர்:

முத்துக்கே ஒளியேற்றும் முறுவர்; சொல்லுக்குச் சுவையேற்றும் குரலர்

செந்தமிழ்க்குச் சீரேற்றும் எழுத்தர்; நெல்லுக்கு மணியேற்றும் உழைப்பர்;

நேர்மைக்கே அணியேற்றும் நினைப்பர்; கல்லுக்கும் கலையேற்று பவர்,என்

கற்போட்டந் தனில்,அவரே கனிவர். 10