பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

7. இனிக்கும் இரவு.

வரிக்காட்டுப் புலிஉறுமும்; கருங்கோட்டான்

வசைபாடும்; அலறும் ஆந்தை, நரிக்கூட்டம் ஊளையிடும்; நச்சரவம்

வெளிக்கிளம்பும் இரவென் றாலும்,

சரிக்கட்டி வாராத கூலிவாங்கச்

சழக்கர்க்குப் பகலில் எல்லாம் தறிக்கட்டை போலுழைத்தார் தலைசாய்க்கும்

இரவென்றால் இனித்தி டாதோ?

. 28

பணம்விரிக்கக் கடைவிரித்துப் பகல்முழுதும்

பொய்விரித்துச் சுரண்டு கின்ற குணம்விரிந்த முதல்விரிந்தார் பாய்விரித்துத் துயில்விரிக்கும் இரவென் றாலும், தணல்விரிந்த தெனஅல்லி இதழ்விரிக்க,

முல்லைதன் முகைவி ரித்து மணம்விரிக்க, முழுநிலாதன் கதிர்விரிக்கும்

இரவென்றால் இனித்தி டாதோ?

2%

20