பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் -

9, அன்னைக்குத் தெரியுமடி போடி!

அன்னை:

கண்ணான மகளுக்குத் தோழி,

கனிவாகப் போய்ச்சொல், நீ போடீl புண்ணாகி நோகின்றாள், அந்தப்

பொன்னாளன் பிரிவென்னும் தீயால்; தண்ணீரைத் தலைமேலே விட்டேன்;

வெந்நீராய் வழிந்தோடக் கண்டேன்; கண்ணுக்கும் மையெழுத மாட்டாள்;

கடுகிப்போய் மாற்றிடுவாய், போடி!

34

மகள்:

கண்ணுக்குள் அவருறையும் போது

கண்ணுக்கு மையெழுதின், அத்தான் பொன்னுடலம் கரு மையாய்ப் போகும்;

போடீ, போ நானெழுத மாட்டேன்; என்னிதழில் 'வண்ணந்தீட் டென்றாய்;

எழிலத்தான் எனையணைத்தே இட்ட பொன்னிதழின் முத்திரைகள் போகும்;

போயிதனை இப்படிச்சொல் லாதே!

35

24