பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

'கரையாத கற்கண்டே, வாடா முல்லாய்: கணுவில்லாச் செங்கரும்பே, பேசும் தென்றால்? தரைதோயா நறுங்கனியே என்றென் றென்னைத் தலைகுனியச் செய்தென்றன் உடலுக் குள்ளே புரையோடும் முத்தமிட்டு, மேலும் மேலும் புத்தின்பக் குறும்பெல்லாம் புரிந்த அத்தான் பறையொலிக்க எனைமணந்த நாள்ம றந்து படுக்கைதனி யிட்டனரே; நானென் செய்தேன் ? 47

எமைக்குவித்து மகிழ்வெள்ளம் மூழ்கச் செய்த எழில்குவிக்கும் இளமையெனும் பொல்லாய்: சென்றாய் சுமைகுவிக்கும் புறக்கடையில் எனைக்கு வித்தாய்; சுவைகுவிக்கும் பழக்கடையிற் சுளையாய் நின்றேன் இமைகுவிக்குங் குழந்தைதனக் கிசைத்தா யாக்கி இதழ்குவிக்கும் இன்பமெலாம் ஓடச் செய்தே இமைகுவிக்கா இரவளித்தாய்; ஓடி விட்டாய்; இளமையதே. உனக்கிடர்தான் நானென் செய்தேன்?

. - 48

(எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்) :

31