பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

17. புளித்த காதல்.

அவன்:

சால்புடைய என்காதற் பெருமை யெல்லாம் சாற்றினையோ தலைவியிடம், அருமைப் பாங்கி

பாங்கி: :

வேல்விழியாள் கேட்டணளே கேட்ட பின்னர் வேலிருக்கத் தான்கண்டேன்; விழியை கானேன்.

೨೧ನ:

பால்வழியும் என்முகந்தான் என்றே நீயும் பாவைக்குச் சொன்னாயோ?

பாங்கி:

சொன்னேன், சொன்னேன்;

'பால்வழிந்து வீணாகிப் போகு முன்னர் பாற்பண்ணை வைக்கச்சொல் போe என்றாள்.

- 7|

அவன்:

எச்சமிலா என்காதற் கிசைவா ளானால் எடுபிடியாய், இனியவனாய், அன்னாள் உள்ளம் நச்சுகின்ற படியெல்லாம் உருவம் மாறி நானவட்கு நிழலெனவே நடப்பே னென்று 'கச்சிதமாய்க் கழறினையோ?

48