பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

18. குறிஞ்சிக் கிழவனும்

குறும்புத் தோழியும்

குறிஞ்சிக் கிழவன்:

முல்லை மலரினைக் கிள்ளிவிட்டாள்-உடன்

முத்துச் சிரிப்பெதற் கள்ளிவிட்டாள்? கொல்லிக் குமரியாள் எக்களித்தே-என்னைக்

கொள்ளவோ தள்ளவோ கொக்கரித்தாள் ?

குறும்புத் தோழி:

பல்லுமக் கலர்ந்த பாங்கினையே-ஒத்துப்

பார்த்திவள் முல்லையென் றேங்கினளாம்

கிழவன்: o

செல்லி யெனுமொரு சேயிழையாள்-இதைச்

செப்பினள் முன்னமே, ஆயிழையே! 75

தோழி:

விரிந்த முல்லையுன் பல்லெனிலோ-விண்டு

விட்டுத் தெறித்திட்ட கல்லலவோ ? பரிந்தச் செல்லியாள் பேசியதோ, உன்னைப்

பழிக்கச் சொற்களை வீசியதே;

5|