பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 45 48 49 50 196 பழமை முழுதும் மறந்து, பாழாம் இன்பதுன் பங்களே இரியச் செய்தே அமைதியும் விழிப்பும் அடைந்திருத் தலாகும். தான்கு எண் ணங்களின் நற்பய னாக நான்கு வாய்மைகள் நன்கு தெளிந்தார் : துக்கம், துக்கத் தோற்றம், துக்க நீக்கம், துக்க நீக்க வழி, அவை. நான்கு வாய்மைகளுள் தன்முத லாவது, (வேறு) துக்கம்: பிறப்பு, வளர்ப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகியவை தொடர்பானது இது. விரும்பத்தகாதவ: வற்றை விரும்புவதும், விரும்பியவற்றைப் பெற முடியாபையும், விரும்பத் தக்கனவற்றி லிருந்து விலகுதலும் துக்கம் ஆகும். இரண்டாவது துக்கத் தோற்றம்: துக்கத் தோற்றத் _ தின் காரணம் அவா. உலகச் சூழ்நிலை ஐம்புல உணர்ச்சி வேட்கையை எழுப்புகிறது. அது நிதை வேருதபோது - துக்கமாகிய வலையில் விழ நேர்கிறது. . பொய்யான இன்பங்க ளாகிய துாண்டில்களில் அகப் பட்டு விடுவதால், முடிவாகத் துன்பம்-துக்கம் தோன்றுக் கிறது. இது துக்கத் தோற்றம். மூன்றாவது துக்க நீக்கம்: நான்’ என்னும் ഷ84. அகன்றால் அவா-ஆசை அற்று விடும். அவா அற்று. விடின் துககமாகிய நெருப்பு பற்றி எரிவதற்கு ஒரு பொருளும் அகப்படாமல் போகும். அதனால் அந்த 'ஆசை நெருப்பு அவிந்துவிடும். இது துக்க நீக்கம். 41 இரியச் செய்தல - ஒடச் செய்தல். 44 வாய்மை கள் - உண்மைகன். 49 வேட்கை - விருப்பம்.

  1. 53

197 நான்காவது துக்க நீக்க வழி : "நான் என்னும் அகத்தை ஒழித்தால் மெய்யறிவு பெறலாம். உள்ளத் தில் உறுதி கொண்டு செய்ய வேண்டிய அறக்கடமை களைப் பயன் கருதாமல் செய்தால், துக்கச் சிறையி லிருந்து விடுதலே பெறலாம். ஒழுக்கமும் பிற உயிர் கட்கு உதவுதலும் வேண்டும். இத்தகைய வழிகளைக் கடைப் பிடித்தால் துக்கம் தொலையும். எட்டு வழிகள் 52 இதற்கு உரிய வழிகள் எட்டு (அட்டாங்க மார்க்கம்) எனத் தொகுத்துக் கூறலாம். அவை: நற்காட்சி, நல் லுாற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என்பனவாம். இவற்ருல் துக்க நீக்கம் பெறலாம். பன்னிரண்டு சார்புகள் பின்னர், புத்தர், மக்களுக்கு இருக்கக் கூடாத பன்னி ரண்டு சார்புகள் (நிதானங்கள்) பற்றி அறிந்தார். எல்லாத் தீமைகட்கும், பேதைமையை (மடமையை) 52 நல் ஊற்றம் - நல்ல உறுதி (கலங்காமை). நல் கடைப்பிடி - நல்லனவற்றைக் கடைப்பிடித்தல், 53 அருஉரு - உருவமும் உருவம் இல்லாத பண்பும் ரு சேர்ந்திருக் கும் நிலை. ‘அருஉரு’ என்பதற்கு, சாத்தனர், ೬: ಕಾ நூலில், உயிரும் உடம்பும் சேர்ந்த தொகுப்பு என்பதாக ஒரு விளக்கம் தந்துள்ளார்: . 'அருஉரு என்பது. அவ்வுணர்வு சார்ந்த, உயிரும் உடம்பும் ஆகும் என்ப் (30:84-85) என்பது பாடல் பகுதி. உணர்வினல், உயிர் உள்ள பொருள்கள் மட்டும் நினை வைத் துாண்டுவதில்லை; உயிர் இல்லாத பொருள்களும் (உணவு, உடை, ஒப்பனைப் பொருள்கள் முதலியனவும்) நினைாவைத் துண்டுகின்றன; எனவே, சாத்தனரின் விளக் கம் சரியில்ல்ே. சாத்தனர் கூறியிருப்பதுபோல் புத்தரே கூறியிருப்பினும் பொருந்தாது. மற்றும், வாயில்கள் ஆறு' என்று புத்தர் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.