பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சித்தார்த்தன் பிறந்த சிறப்புறு காதை கனவு காண்டல் 1 உண்டுமக வென்கிறநல் உறுதி உந்த ஒரிரவு மாதேவி உறங்கும் வேளை வெண்டிருநல் விண்மீனென் றவள்வ யிற்றுள் வீறுடனே விரைந்துவந்து வீழ்ந்த தாகக் கண்டகளு வதனைத்தன் கணவன் கேட்கச் கழறியதும் கரையில்லாக் களிப்பு சாலக் கொண்டரசன் களு நூலில் கூர்ந்தோர் தம்மைக் கொணர்கவென ஏவலரும் கொண்டு வந்தார். (வேறு) 2 காவலன் ஆவ லோடு கனவுநூல் வல்லார் தம்பால், - மேவிய கனவைக் கூற, மிளிருநூல் அன்னார் ஆய்ந்தே, ஒவலில் மகிழ்ச்சி பொங்க உலகினை ஒம்பிக் காக்கும் காவலன் பிறப்பான் என்று கண்டநல் உண்ம்ை சொன்னார். (வேறு - ஆசிரியப்பா) 1 எண்ணிய எண்ணியாங் கெய்துப எண் ணியார் திண்ணிய ராகப் பெறின்' எனல் தெள்ளிதாம். பாடல் 1 விண்மீன்-நட்சத்திரம்; வீறு - ஒளி: கரை ஆளவு; சால - மிகவும்; கூர்ந்தோர் - மிகுதிறன் வாய்ந் தோர். பாடல் 2 மிளிர்தல் விளங்குதல்; ஒவல் - அழி கல். அடி 1 : 666 ஆம் திருக்குறள் காண்க. 2 தெள்ளிது தெளிந்த உண்ம்ை: ' 5ست 10 15 2 ←; 25 17 சாயா உளத்துத் தாய்மை உணர்வால் மாயா தேவி மணிவயிறு வாய்த்தாள்; கறுத்தன கொங்கைக் காம்புகள் திரண்டு; வெறுத்தனள் இன்சுவை; விரும்பினள் புளிப்பு; மாங்காய் தின்றனள்: மயக்க உணர்வொடு துரங்காத் துாக்கம் தொடர்ந்து கொண்டனள். ஐயிரு திங்கள் ஆன போழ்து மையிருள் நீக்கும் மணிநிகர் மகவைப் பெறுதற் குத்தன் பெற்ருேர் இல்லம் உறுதல் நல்லதென் றுரைத்தனள் தேவி. அவ்வணம் அவளே அளித்தோர் வாழும் தேவ தாகம் என்னும் திருநகர் மேவச் செய்ய வேண்டிய அனைத்தும் ஆவல் உந்த அரசன் செய்தான். - கபிலையி லிருந்து தேவ தாகம் செல்லும் வழியெலாம் செப்ப னிட்டனர்; தேவி திருமகள் என்னத் திகழ ஆவன புனைந்தே அணிபெறச் செய்தனர். முத்துச் சிவிகையில் முத்து நகையாள் மெத்தென அமர்ந்தாள் ; மெல்லியல் மாதர் முன்னும் பின்னும் மொய்த்துச் சென்றனர். பன்னரு ஆடலும் பாடலும் நிகழ்ந்தன. பரிகள், யானைகள், படைகள், பல்லோர் வரிசையாய்ச் செல்ல, வளங்கெழு நகரமே இரண்டு பக்கமும் எதிரும் பின்னும் 5 கொங்கை-முலை. 8 தூங்காத் துாக்கம் - மசக்கை. 13 அளித்தோர் - பெற்ருேர் 21 சிவிகை - பல்லக்கு; முத்து நகையாள் - முத்துப் போன்ற பல்லுடைய தேவி. 24 பன்ன ரும் - சொல்லுதற்கு அரிய 25 பரிகள் - குதிரைகள். – 2