பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 105 துன்றி இருக்கையில், சூலர் இவரை எதிர்நோக் காதுதம் ஏவலர்க்கு என்னவோ புதிராய் வேலகள் புகன்றுகொண் டிருந்தார். ‘என்ன இவையெலாம்’ என்றிவர் கேட்க, புத்தர் பெருமான் விருந்து புசிக்க 110 ஒத்துக் கொண்டுளார்; உறுவர் நாளே. அதளுல் இந்த அரியஏற் பாடுதல் விதமாய்ச் செய்கிறேன் என்றவர் விளம்ப, புத்தரைக் காணப் புறப்படு வேனெனப் பிண்டிகர் கூற, பேரிரவு வேண்டா, 115 நாளை காலை நண்ணலாம் என்ன, காலே கதிரவன் வருமுன் மும்முறை எழுந்தெழுந் துகாண இருளாய் இருந்ததால் வைகறை வந்ததும் வல்லே சென்று - புத்தர் பள்ளியுள் புகுந்து விட்டார். 120 மெத்த அவரை மேலோர் ஏற்றுத் தெளிவுரை பலவும் தேன் மழை போல அளியொடு அருளினர் அவற்றுள் ஒன்று ஆண்டவ ரேயெ லாம் ஆக்கினர் என்றால். ஈண்டெலா உயிர்களும் எய்தும் இடர்க்கெலாம் MAMAMASA MAAA SAAAAA SAAAA AAAAMA AMMAAA SAAAAAS -- - - ASA SSASAS SS SAAAAAS - «به *xه:عد 105 இவரை - பிண்டிகரை, 106 எதிர் நோக்காது வரவேற்சிாமல்; ஏவலர் - பணியாளர். 107 புதிராய் - புரி யாத புதுமையாய் ; புகன்று கொண்டு - (செய்யும்படி) சொல்லிக் கொண்டு. 108 இவர் - பிண்டிகர். 112 அவர் சூலர். 115 என்ன - என்று சூலர் சொல்ல. 118 வைதறை சிறிது இருட்டு_ இருக்கும் விடியற்காலம்; வல்லே விரைந்து. 120 ம்ேல்ோர் - புத்தர். 122 அளி - அருள், இரக்கம்._24 ஆண்டு ஏலா - இவ்வுலகில் உள்ள எல்லா இன்ா:இன்க்.க்குறை). 245 125 அவரே பொறுப்பென உயிர்கள் அனைத்தும் தவருய்ப் பழிசொலும்; தகாது இக் கொள்கை; எனவே, நாமே எதையும் ஒர்ந்து நினைவில் கொண்டு நிகழ்த்தவேண் டுமெனத் தெள்ளத் தெளியத் தெரிவித் தாரவர். 130 வெள்ளைத் துகிலில் விரைவில் சாயம் பிடிப்பது போலப் பிடித்திட உளத்தை, படிப்பினை யாகப் பலவும் அறிந்து பிண்டிகர் பிரானிடம் விடையும் பெற்றார். மறுநாள் விருந்து முடிய, மற்றதன் 135 மறுநாள் பிண்டிகர் மைத்துனர் மனையிலே ஐயர்க்குப் பெருவிருந்து அளித்தார்; பின்னர்ச் சிராவத்தி நகர்க்குச் சீரியோர் வரும்படி மருதுற வேண்ட, மாண்பினர் இசைந்தார். பிம்பி சாரரைப் பிரிதல் பெரியார் கவுதமர் பிரிய இருப்பதால் 140 பிம்பி சாரர் பெரிதும் வருந்தி அன்பிற்கு அறிகுறி யாக ஐயரின் சிறுமயிர் முடியும் சிறிது நகமும் 125 அவரே - ஆண்டவராகிய கடவுளே. 128 நிகழ்த்தல் - செய்தல். 129 தெள்ளத்தெளிய - மிகவும் தெளிவாக. 130 துகில் -துணி. 131 உளத்தைப் பிடித்திட 133 பிரான் - பெருமான். 137 - சீரியோர் - சிறப்புறு புத்தர். 138 மறாது உற வேன்ட - அவர் மறுக்காது வரும் அளவுக்கு வேண்டிக் கொள்ள, மாண்பினர் - மாண்புடைய புத்தர். 141 அறிகுறி - அடையாளச் சின்னம். 42 சிறு மயிர் முடி - சிறிதளவு முடிமயிர்; சிறிது - கொஞ்சம்.