பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 110 முனிவர் எவரினி மொழிவார் அறிவுரை ? உந்தும் அவன் மகன் உதாயி பத்ரன், எந்தநாட் டையாயினும் இரும்படை கொண்டு முந்திப் பொருது முறையே வென்றி.டின் உள்ளக் குழப்பம் ஒருவாறு நீங்கக் 115 கொள்ளலாம் ஆறுதல் என்று கூறினான். அசாத சத்துரு அதை மறுத் திட்டான். அப்போது அங்கே அரிய மருத்துவர் ஒப்பிலாச் சீவகர் உரைத்தார் ஒருவழி: அறவோர் புத்தர்பால் அடைக்கலம் புக்கே 120 அறவுரை கேட்கின் அகலும் துயரம் - என்பது அந்த இனிய அறிவுரை. பகவரை முன்பு பகைத்துக் கொண்டதால் தகவாய் எப்படித் தான் செல் வதென்று விழித்தான்; பின்னர் விரைவில் தெளிந்து 125 செழித்த அறிவுறு வேக ரோடும் பழகு நண்பர் பல ரொடும் சென்றான். கழுகு மலைமேல் கவினுறு விகாரையில் அழகுப் புத்தர் அமர்ந்து வீற் றிருந்தார். பருவ வெண்ணிலா பளபளப் பான 130 உருவொடு எங்கும் ஒளிவீ சியதை நல்ல நிமித்தமாய் நவின்றனர் பலரும். பல்லோர் நடுவண் பகவர் இருந்தார். விண் பெரு வெளியில் வெய்யோன் யாரென. விண்மீன் நடுவண் வெண்ணிைலா எது என I I I உந்துதல் -- ஊக்குதல்; அவன்மகன் - அசாத சத்துருவின் மகன். 113 முந்தி - முன்னேறி. 131 நிமித் தம் - சகுனம். 133 வெய்யோன் - ஞாயிறு. 135 140 145 i 50 139 அறிவர் - புதிதா 143 பரல் - போற்றி, வணங்கி; 277 வினவு வதுபோல், விகாரையில் புத்தர் யாரென வேந்தன் யாதுமறி யான்போல் சீராய் வினவ, சீவகர் புத்தரை அறியக் காட்டி அடிபணி வித்தார். அறிவர் அவனை ஆட்கொண் டருளினார். சிறியோர் தமக்குச் செய்த சிறுமையைப் பெரியோர் பொறுத்தல் பேருண்மை யன்றோ? அரசன் அவர்பால் அளவில் அறவுரை பரசிப் பெற்றுப் பண்பில் உயர்ந்தான்; அப்புறம் தன்னை ஐயர் அடிகளில் ஒப்படைத் திட்டான் உய்தி பெறவே : மெய்யாம் சங்கம் மேவினான் அவனும். ஐயர் வாழ்த்தி அவனை அனுப்பினார்; எனினும், தந்தையைக் கொன்ற தகாத தீவினை மைந்தனை விடாதென மனத்துள் எண்ணினார். அந்தத் தீவினை அகல அரசனும் நல்லறம் பலவும் நாடிச் செய்தான். இல்லே கழுவாய் இதனினும் அவற்கே. மருவிய தீவினை மறையும் என்றே ஒருவரும் புகல ஒல்லா தன்றோ ! 145 உய்தி.-ஈடேற்றம். 152 கழுவாய் - பாவ நீக்கவழி. அவற்கு - அவனுக்கு. 153 மருவிய - வந்து சேர்ந்த. 154 புகல ஒல்லாது - சொல்ல முடியாது.