பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. இறுதிப் பயணம் ஏற்ற காதை உற்றார் சிலரின் முடிவு ! ஐயரின் பிந்திய காலத்தில் - சிறிய அன்னை கவுதமி ஆவிநீத்தாள். வைய மதில் நூற் றிருபதாண்டு - அவள் வாழ்ந்திட்ட காலமாம் என்றுரைப்பர். 2 ஏழுபத் தெட்டாம் அகவையிலே - இல்லாள் யசோதரை ஞாலமும் விட்டகன் றாள். வீழுநற் கேள்வராம் புத்தருடை - அகவை வேறிலை ஒன்றே என உரைப்பர். 3 புத்தர் இறுதிப் பயணமதை - இராசக் கிருகக் கிருத்திரக் கூடமென்னும் நத்தும் இடத்தில் தொடங்கினாரே - கூட நல்லபல் பிக்குகள் சூழ்ந்தனரே. 4 செல்லும் வழியெலாம் நல்லுரைகள் - ஐயர் செப்பிய வாறே செல்ல லானார். அல்லலில் அம்பலத்தி கா என்னும் ஊரை அடைந்துசின் னுளவண் தங்கியபின், 5 நல்லவ ராம்சாரி புத்திரரின் - ஊராம் நாலந்தா என்பதை நண் ணியங்கே அல்லன நீக்க அடியவர்க்குப் - பல அன்புரை சந்தே அகன்றிட்டார். ۔ عیسٰی-سینےسے 2 ஏழுபத்தெட்டு - எழுபத் தெட்டு; 纜蠶 மனைவி; ஞாலம் - உலகம் வீழும் - விரும்பும்; கேள் கணவர் - புத்தருக்கும் யசோதரைக்கும் அகவுை ஒன்.ே 3 கிருத்திரக் கூடம் - ஒரு عمaنتي - وهي ت - தமிழில் క్ష్ மலை என்பர்; நத்தும் விரும்பும், 4 அல்லல் బ్లిజ్జీ பம் தராத, அம்பலத்திகா - ஓர் உணர்; சின்னுள் *爵 | சிலநாள் அங்கே, 5 அல்லன நீக்க - (அவ்வூரில் ೩<#ಣ್ಗ கள்) நல்லன அல்லாத தீமைகளே நீக்க. 27g 6 பன்னரு சீர் ச்சாரி புத்திரரும் மிகப் பார்புகழ் மெளத்கலி யாய்னரும் இன்னல் அகன்றிட இவ்வுலகை - நீத்து இணையில் பெரும்பே' நடைந்தஐரே. 7 சார்புத் திரர்தம் நினைவாக "மிக சால்புறு சேதி வன்த்தினில்ே 2, r. .. வாரீர் தொழஎன் றழ்ைப்பது ப்ோல்-சீர் வயங்கு நினைவகம் கட்டினரே. மெளத்கலி யாயன ரின் நினைவாய்ப்-புகழ் மன்னிடு வேணு வனத்தினிலே சித்தலும் மக்கள் தொழுதிடவே - நல்ல நினைவகக் கூடம் எழுப்பினரே. 9 அப்புறம் பாடலி காமமெனக் - கூறும் அரிய நகரை அடைந்து புத்தர், தப்பில் சுநீதர், வருடகாரர் -நனி தக்க அறிவுரை பெறச்செய்தார். 10 மேலும், பெருமான் விரிசிநாட்டு -நகர் மேன்மைசார் வைசாலி சென்றடைந்து கோலமார் நல்அம்ப பாலிஎன்பாள் - உரிமை கொண்ட மாந் தோப்பினில் வீற்றிருந்தார். (வேறு) அம்ப பாவி அம்பபா லியெனும் நங்கை அழகுறு கணிகை யாவாள்; 6ઃ இன்னல் - துன்பம்: நீத்து -நீங்இ) ப்ெபுறம் _ அதன் பிறகு, தப்பு இல் தவறு இல்லாத; சுந்தர், வருடகாரர் - இவ்விருவரும் புத்தரின் அடியவர்கள்: 10 விரிசி - ஒரு நாடு; வைசர்லி - விரிசி நாட்டுத் தலைநகர்; கோலம் - அழகு, அம்பபாலி - ஒரு பெண்ணின் Qewtur*; உரிமை கொண்ட - (அம்பபாலிக்கு) உரியதான