பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 40 பெண்ணொடு கடலில் பிறந்த நீ இந்தப் பெண்ணின் மேல் ஏன் பெய்கிறாய கனல்மழை ? என்றன் நீண்ட இந்தப் பின்னலைத் - தின்றுனே விழுங்கும் தி.நா கமென்றே கன்றியெண் ணினையோ காயாய் நிலவே 45 என்று புலம்பி இனை வாள் நைந்தே, இவ்வாறு, மற்றமாந் தர்க்கெலாம் மாறாச் சிற்றின்பப் பற்று விளைக்கும் பருவ வெண் ணிலா புத்தரின் உணர்வைப் பொசுக்க இயலுமோ ? மெத்தவும் போதம் மேவியது அந்நாள். 50 இமய மலையை எப்புயல் அசைத்திடும்? அமையும் ஞாயிறை அணைக்கும் புனல் எது? எண் ணிய எண் ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்' எனல் தேற்றமே! 40 திருப்பால் கடலில் திருமகளாம் பெண்ணொடு நிலா பிறந்ததாகக் கூறுவதும் புராணக் கதை. 42 பின் னல் கூந்தல் பின்னிய சடை. 43 விழுங்கும் தீ நாகம் - சந்திர கிரகண காலத்தில் சந்திரனை விழுங்கும் கொடிய பாம்பாகிய இராகு. 42-44 எனது பின்னலை, உண்ண விழுங் கும் பாம்பு என்று எண்ணி என் மேல் பகை கொண்டு என்னை எரிப்பதை விட்டு விடு. 45 இணைதல் - வருந்துதல். 46 மாறா - நீங்காத . 52-53 எண்ணிய பெறின் குறள் (666); 53 தேற்றம்-உறுதி. 301 நூல் பயன் (கட்டளைக் கலித் துறை) உலகெலாம் உய்ய உயர் புத்தர் ஈந்த உரைபலவும் அலகிலா மாந்தர் அகமகிழ்ந் தேற்ற அரியகாதை இலகவே யாத்த இனியவிக் காப்பியம் ஏற்றொழுகின் விலகிட வேணவா, வீருெடு பார்மேல் விளங்கலாமே அடி 2 காதை - வரலாறு. 3 இலக - விளக்க முற். ஒளி பெற; யாத்த இயற்றிய ஒழுகின் (ஏற்றுக் கீந்த் படி) வாழ்க்கையில் பின்பற்றி நடந்தால், 4 வேணவர் - பேராசை வீறு - பெருமை, வெற்றி