பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஒருமுறை தனது, மெய்யின். உட்புகக் குத்திப் பார்க்க இறுவது போன்ற துன்பம் எய்திடத் துடித்து விட்டான். 7 புண் ணிலே பீச்சும் செந்நீர் புரவலன் உடைந னப்ப, அண்ணவின் மழைக்கண் ணிரில் அன்னமும் நனைந்த தம்மா! புண்ணிலே வலியை நீக்கப் பொருத்தமாம் மருந்து பூசி உண்ணெனப் பாலும் சோறும் உழுவலன் ஊட்டிக் காத்தான். வழக்கு 8 இன்னபல் செயல்கள் கண்டே இழிமகன் தேவ தத்தன் என்னுடைக் கனையால் வீழ்ந்த திதுவென உரிமை கோரித் தன்னிடம் அன்னப் புள்ளைத் தரும்படி வற்பு றுத்த, மன்னிளங் குமரன் ஒவ்வான். மறுத்தனன் இயலா தென்றே. உற - இனிமையாக - மெதுவாக; இறுவது - இறப்பது ; எய்துதல் - அடைதல். ● * - 7 செந்நீர் - இரத்தம்; புரவலன் - காப்பவன் - சித்தன்; அண்ணல் - சித்தன்; அம்மா - இரக்கக் குறிப்புச் சொல்; உழுவலன் - மிக்க அன்பினன். 8 6.ಶಿಕಾ' - ஆமபு; புள் - பறவை; மன் - அரசு; ஒவ்வூான் - ஒத்துக் கொள் ள்ான்; இயலர்து-முடியாது. 91 வெருவரல் - அஞ்சுதல்; 45 (வேறு) 9 ஒருவரின் முயற்சியால் உற்றதோர் பயனேயின் ைெருவர் பற்றல் அருவருக் கத்தகும் ஆண்மையில் செயலென அறிவாய் நீயே. வெருவர நம்மிடை வேண்டுமோ செருவிடல்? விரைவில் என்பால் தருவதே முறையெனத் தருக்கொடு புள்ளினைத் தத்தன் கேட்டான். வேறு 10 விண்ணிலே பறந்து செல்லும் . வேறின உயிரி மீது மண்ணுளோர் உரிமை கோரல் மடமையுள் மடமை யாகும். எண்ணியே பார் நீ உண்மை இஃதென உணர்வாய் என்றே அண்ணலும் உணர்த்தத் தத்தன் அவ்வுரை ஏலா னுகி; 11 காட்டுள விலங்கு, மேலே கண்டிடும் பறவை, யாவும் வேட்டையா டிடுதல் மன்னர் வியன்குல மரபாம் கண்டாய். நாட்டினே ஆளும் வேந்த நன்மகன் நானும் ஆவேன். செரு - சண்டை; தருக்கு கர்வம். தத்தன் தேவ தத்தன். ', 10 உயிரி-உயிருடையது; மீது- மேலே; ஏலான் - ஏற் துக் கொள்ளான். 11 மேலே - உயரே - விண்ணில்ே; வியன் - பெருமை; வீட்டுதல் - வீழ்த்துதல்; எகினம் - அன்னம் ; சேர்த்தி - சேர்ப்பாய்.