பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 8 கடவுளைத் தொழுது போற்றும் கடைமடை யர்கள் பல்லோர், கடவுளே உலகைத் தோற்றிக் காத்திடு கின்றார் என்பர். கடவுளின் மக்க ளாகக் கருதிடும் மாந்த ருள்ளே தொடவுமே தகாதார் உண்டோ? 'து.ாது உமிழ்க காறி. 9 மாட்டினைத் தொழுவார் போற்றி; மக்களைத் தொடவே மாட்டார். மாட்டினும் இழிந்த தாமோ மக்களின் பிறவி? மற்றும் வீட்டினுள் வரலாம் தாழ்ந்த விலங்குகள்; ஆனால் மக்கள் வீட்டினுள் வரற்க என்று விதித்துளார் வெட்க மின்றி. 10 உண்ணுநல் லெண்ணெய், பால், மோர், உருக்கிடும் வெண்ணெய், தாமே பண்ணுதல் அரிய தென்று பலருமே தொடலாம் என்பர். தண்ணிய நீர்துன் பின்றித் தரையிலே கிடைப்ப தாலே மண்ணுறு நீரை மட்டும் மற்றவர் தொடலா காதாம். 8 கடை மடையர் - கடைப்பட்ட அறிவிலிகள் . 9.மாத் டினும்-மாட்டைக் காட்டிலும்; வரற்க - வராமல் இருப்தி ராக; விதித்துளார் - சட்டம்போல் கட்டுப்பாடு செய்தி ளார் 19 பண்லுதல்- தயாரித்தல்; அரியது-சிரமமான்'இஜ் தண்ணிய - குள்ந்த (குறிப்புப் ப்ெயரெச்சம்); தரையிங் - பூமியில், மண்ணுதல் கெழுவுதல், குளித்தல், தாய்ல் செய்தல். : 163 11 உண்டிடும் உணவை, ஒணான், உடும்பு, தேள், அரனே, அண்டிடும் காக்கை, கோழி, ஆடு, நாய், மாடு, பூனை கண்டிட லாகும் என்னும் கயவரே, மற்ற மக்கள் கண்டிட . கா தென்பர் ; பல்லி

கடைந்தெடு மடமை. ஈதாம். 12 தம்பி நீ கொடுக்கும் பாலே தக்கது; குடிப்பேன் யானும். வெம்பி நீ வருந்த வேண்டா; விரைவினில் கொணர்க என்று நம்பிதான் கேட்க, பையன் நளிைமகிழ் வுற்றுப் பாலைச் செம்பிலே கொணர்ந்தே ஈயச் சீரியோன் அருந்தி னானே. 13 அருந்திய வுடனே சோர்வும் அகன்றிடச் சிறானை நோக்கி விருந்து நீ செய்த தாலே விரைவிலே உயிர்பி ழைத்தேன்! பெருந்தகைப் பிள்ளாய்! நல்ல பேறு நீ பெற்று வாழ்க! பிரிந்துநான் செல்வேன் என்று பீடுறும் அண்ணல் போந்தான். 11 கயவர் - கீழோர்; கடைந்தெடுத்தல் - கடைந்து உண்டாக்குதல்; மடமை - முட்டாள் தன்மை; 12 நம்:பி. இத்தார்த்தன்; ஈய - கொடுக்க; சீரியோன் - சிறந்த சிக் இன். 13 சிறான் - சிறுவன்; பெருந்தகை - இடத்துபஜ் ள்ேளாய் - பிள்ளையே; பேறு -பர்க்கியம்; பீடு:-துெருத்தில்