பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

145



சொல்வது சாத்தியமே என்று நகருள் கூறினான். இவன் மெய்யனானவனாயிருந்தால், உமக்குக்கொடுத்த பொன் உம்மிட மொப்படைத்த களஞ்சியத்திலுண்டென்று சொல்லாமல், பிராமணனைப் பொய்ப்படுத்துவதிலும், அவனுக்கு ஞாபக மூட்டுவதிலும் மேன்மைத்தங்கியது. நாமே பொய்த்து போவது தான் என்று அவன் உத்தேசித்தான் போலும். மெய்யை ஒரு பொய்யன் ரூபகாரப்படுத்த முடியுமோ? இல்லை இதில் அரிச்சந்திரனெப்படி மெய்யுரைத்ததாகும்? எல்லாரு முணர்வார் களாக அரிச்சந்திரன் கொடுக்கிறேனென்ற பொன் விஸ்வாமித்திரர்க்கு கொடுத்த களஞ்சியத்தில் அடங்கினது. அரிச்சந்திரர்க்கு தெரிந்திருந்தும் முனிவனுடைய கோபத்திற்கு பயந்து பின்னுமந்த யாகத்துப் பொன்னைக் கொடுப்பதாகச் சொன்னானாம். நகர் நீங்கிய காண்டம் - பாட்டு 23. உன்னுடனே யுரைத்தபொரு ளுனக்கடியே னுகந்தளித்த வுரிமைச் செல்வந் தன்னுடனே போன தெனா வுணர்ந்தேனா மினிமுனிவாற் றருவ லென்றே நின்னுடனே யானுரைத்த சபதமினி மாறுவனோ நீயான் விட்டால் பொன்னுடனே தருவனென்றான் புகரோனை யவன ழைத்துப் பொருத்தினாளே. இப்படி முனிவன் சாபத்திற்கு பயந்து சொல்லும் பொய், இந்துக்களுக்கு பொய்யாகாது போலும். பறையர்கள் கேட்டதை கொடுக்காது. உதாரத்வ மாகும்போலும். இவன்தானோ சத்திய பாஷ அரிச்சந்திரன் இந்து மதத்தினரே! நீங்களெப்போது சத்தியத்தைக் கடைபிடிப்பது. இதில் அரிச்சந்திரன் கொடுத் திருப்பதைப் பின்னும் கொடுப்பேனென் பது, மெய்யா? பொய்யா? பாருங்கள். அரிச்சந்திரனானவன், தன் யாகத்திற்கு பொன் கொடுக்கி றேனென்று ஒப்பிக்கொண்ட பிறகு சுக்கி என்னும் பார்ப்பானை அழைத்து இவனிடம் முன்குறித்த அளவு பொன் எவ்விதமாவது வாங்குவதோடு, நீ இவன் பின்னே நடக்கும் கூலியும் வாங்கும்படிச் சொல்லி அனுப்பினானாம். அப்படி யே யாவரும்