பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 க. அயோத்திதாஸப் பண்டிதர் காசி பட்..ணம் போய், அரிச்சந்திரன் தன் பெண்டு பிள்ளையின் தலைமேல் ஒவ்வொரு புல் சுமையை வைத்துத் திரிந்து விலைக்கூறி புல்சுமையோடு, மனைவியையும் மகளையும் ஒரு பார்ப்பானிடம், தான் யாகத்திற்குக் கொடுக்க வேண்டிய பொன்னளவுக்கு விற்றுவிட்டானாம். கூடவந்த சுக்கி பார்ப் பானும் பணம் பெற்றுக்கொண்டானாம். இந்துக்களே! அப்பணக் குவியலை எவ்விடங் கொட்டி அளவு பார்த்ததும் அல்லது அப்படியே தமது பாங்கிக்கு செக் எழுதிக் கொடுத்ததும், அல்லது பாங்கியிலிருந்து மற்றொரு பாங் கிக்கு அப்பணக் குவியலை மாற்றிவிட்டதும் தெரியவில்லை. இப்படி பொய்யை பொய்யால் வெல்ல பொய் பந்தயங் கட்டி நின்ற இந்துக்களும், அவர்களெழுதிய நூல்களும், மெய்யாயிருக்குமென்ப தெந்த அரசாங்க முறையோ? தெரியவில்லை. சுக்கி பார்ப்பான் விஸ்வாமித்திரனின் பொன் யாவும் பெற்றுக்கொண்டு அரிச்சந்திர பிச்சைக்காரனைப் பார்த்து யானுன்னுட னலைந்ததற்கு கூலி வேண்டுமென, அரசனப் படியே தன்னை விற்றுக்கொடுக்கும்படி மந்திரியிடம் சொல்லி, சுக்கிர சாமியாரை யழைத்து, காசி பட்டணதிலே தன் தலைமேல் புல் சுமையை அரிச்சந்திரன் சுமந்துக்கொள்ள மந்திரியானவன் அரிச்சந்திர ஏழை மனிதனை விலைக்கூறிவர. காசிக் காண்டம் - பாட்டு 51. வார மேதகு மந்திரி மன்னனைத் தூரமேவிலை கூறிய சொற் கேளா வீரவாகு வெனும் பெயர் மேவினோன். சூர நீர்மைப் புலைமகன் றோன்றினான். இதைக் கேட்டு கடை வழியே செல்லும் வீரவாகு என்னும் பறையன், குடங்கள்ளைக் குடித்துவிட்டு, காவடியில் மாட்டுத் தோலை வைத்துக்கொண்டு விற்பனையாளிடம் வந்து காவடியை கீழே இறக்கிவிட்டு இடையிலிருந்த துண்டு துணியால் வாயை மூடிக்கொண்டு எல்லா இழித்தொழிலும் செய்யச் சொன்னால் செய்வாரோ? என்னைப்போன்ற இழி ஜனங்களுக்கு விற்பதுண் டோ? என்ன விலை கொடுக்க வேண்டும் சொல்லுமென்று கேட்க. அரிச்சந்திரன் மந்திரியைப்பார்த்து இவனிடமே என்னை