பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

147



விற்றுவிடும் என்றான். அப்படியே மந்திரி வீரவாகு பறையனைப் பார்த்து, காசிக் காண்டம் - பாட்டு 55. ஆயி னன்றென் றமைச்சனு மவ்வயின் மேவி னனினி விற்ப ஒனக்கென்றான் ஈயு நல்விலை யேதனப் பொன்பதி னாயி ரம்மென் றமைச்சனி யம்பினான். இவருக்கு பதினாயிரம் பொன் விலை கொடுப்பீரானால் அடிமைப் படுத்துவேனென, அப்பறையன் சம்மதித்து உடனே பொன்னைக் கொடுத்து வாங்கிக்கெண்டானாம். பொன் பார்ப்பானுக்கு சேர்ந்ததும், அரிச்சந்திரன் காலனென்னும், பறையனின் காவடியைத் தூக்கிக்கொண்டு போய் அவன் வீட்டில் வைத்துவிட்டு அவன் கூறியபடி , வாய்க்கரிசி மட்டும் தானேற்று, சுடுகாட்டில் காவலிருப்பதாக அரிச்சந்திரன் போய்விட்டானாம். பதினாயிரம் பொன்னுக்குப் புலையனிடம் அடிமையுண்ட அரிச்சந்திரன் தனக்குக் கிடைக்கும் வாய்க் கரிசியை சமைத்துண்ணாமல் சேர்த்து வைத்துக்கொண்டிருக்க, இவனைவிட்டு பிரிந்த மந்திரியும் வந்து சேர அவ்வரிசியை மந்திரியிடம் கொடுக்க, அவன் அரிசியை புல்லுடன் சேர்த்து பசுக்களுக் கூட்டி விட்டு, சாணத்தில் வந்து கோமியத்தில், சுத்தமான அரிசிகளை யெடுத்துக் குத்தி சமைக்க, அதை யுண்டிருந்தானாம் அரிச்சந்திரன். காசிக் காண்டம் - பாட்டு 70). மண்டலத் திறைவ னுய்த்து வைத்தவாக் கரிசிதன்னைக் கொண்டுபோய்ச் சுரபிக்கீய்ந்து, கோமயத்துடனே வீழ்ந்த தண்டுல மெடுத்துக் குத்திச் சமைத்தினி துதவ வச்சோ றுண்டவ ருறைந்தார் பின்னை, யுற்றவா ரெடுத்து வைப்பாம். இப்படி சுடுகாட்டி லிருக்கும்போது இவன் பெண் ஜாதியாகிய சந்திரமதியை வெட்ட, இவன் யஜமானனான பறையனா லிவனுக்கு அநுமதி கிடைத்ததாம். அப்படியே அவளை வெட்டாமல், தன் கையிலிருந்த கத்தி சந்திரமதி கழுத்தில் மாலையாக விழுந்துவிட்டதாம். பின்பு வெட்ட வில்லையாம். வெட்டுவேனென்று கூறி வந்த அரிச்சந்திரன்