பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 க. அயோத்திதாஸப் பண்டிதர் வெட்டாமற்போனது பொய்யல்லவா? தேவர்களை கண்டு வெட்டாமல் விட்டானென்பாராயின் தேவர்கள் மெய் மொழியா ராவாரோ? இதில் இந்து மத தேவர்கள் பொய்யரா? அல்லது அரிச்சந்திரன் பொய்யனா? புத்தியுள்ள தமிழர்களே சீர்தூக்கிப் பாருங்கள். அவ்வரிச்சந்திரனது கதா கருத்தை யறிந்தொழுகல் அவசியத்திலு மவசியமாகும். தெளிதல். உலகத்தி லில்லாத ஒரு பொய்யை இந்து மத நூற்களிலே காணலாமென்பது உறுதி. இதை யாலோசனையா லறியலாம் இந்த அரிச்சந்திர புராணத்துள்ளே சந்திரமதிக்கு பிறக்கும் போதே கழுத்தில் சிவனால் தாலியிடப்பட்டிருந்ததாம். பிறக்கும் போது தாலியோடு பிறப்பது முறையாமோ? அப்படி முதலிலே தாலிகட்டியவன் அவள் கணவனாகானா? அவ்வழக்கத்தினாலோ! இன்றும் சிசுக்கல்யாணம் நடக்கின்றது. சந்திரமதியை கட்டிக்கொண்ட அரிச்சந்திரன் புனர் புருடனா கானா? தாலி கழுத்திலிருப்பது அரிச்சந்திர னொருவருக்குத்தான் தெரியுமாம். அதனாலேயே அவளுக்கு இவன் தாலி கட்டாமல் போனான். ஒருவன் பெண்டீரை அழைத்து வருவதற்கும் இவ்விஷயத்திற்கும் பேதமென்ன? இந்த சந்திரமதி தன் குமாரன் பாம்பால் கொல்லப்பட்டா னென்பதை செத்துப்போனா னென்றொரு பொய்யும், தங்கள் அரசுரிமையில் நாட்டியமாடிய பறைச்சிகள் கேட்ட குடையைக் கொடுக்காதிருந்தும் கேட்டவர் களுக்கு மறுத்தில்லாத' நமக்கு இவ்விதியா என்று மறு பொய்யும். காசிராஜனிடம் இருமுறை உன் மகனை யானே கொன்றேன் என்று இன்னொரு பொய்யும் கூறியது சரிதானோ? பொய்யுள்ள வர்கள் பதிவிரதையோ? பொய்யில்லாதவர்கள் பதிவிரதை யோ? நீ மறைவாக அணிந்துள்ள தாலியை அரிச்சந்திரன் கட்டவில்லையே! அவனுக்கு நீ வாழ்க்கைப் பட்டது எப்படி.? என்று கேட்டால், என்ன மறுமொழி கூறுவாள். இவளை சுமங்கலி என்று எப்படி மற்ற ராஜஸ்திரிகள் நம்பியிருப்பார்கள் இவள் பொய் சொல்லானுக் குடன் பட்டு, பிரத்தியக்ஷ மாக, மூன்று பொய்களைச் சொல்லியிருக்கிறாளே! இது எந்த முறை? பாம்பால் கொலையுண்டவனை செத்தா னென்பதும், குடையைக் கொடுக்காதிருந்தும், கேட்டவர்களுக்கு இல்லை யென்றோமா