பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

149



(அரசன்) என்பதும், காசிமன்னன் புத்திரனைத்தான் கொல்லாதிருந்தும், அரசன் முன் நானே கொன்றேனென்பதும், பொய்யல்லவோ? லோகிதாசன் கொல்லப்பட்டிருந்த இடத்தி லிருந்து எடுத்துப்போகும்போது, நரி, செந்நாய் முதலிய மிருகங்களிருந்ததாம். ஆனால் குமாரனை கடித்துத் தின்றிருப்பதாக ஒன்றும் கூறவில்லை மார்பின் மேல் சாய்த்துள்ள பிணத்தை கழுகுகள் வந்து தாவி இரப்பையால் அடித்ததாம். இருளில் கழுகுகள் பரந்து வந்தடிக்குமோ? பேய் பிசாசு பூதமிவைக ளிருந்ததாம். இவைகள் உருவுள்ளதோ? சுடலையில் தன் பிள்ளைப் பிணத்திற்கு தேவர்களைக் காவல் வைத்துவிட்டு விறகு பொருக்கப்போனாளாம். பறையன் தாலியை கண்டதால் தன் கணவனென் றறிந்தாளாம். தேவர்களை ஏவல் செய்யவைத்த வள் விஸ்வாமித்திரன் பொன் கொடுக்க இயலவில்லையே. நம் தாய் நாட்டில் வீரமற்ற மாதர்களி லிவளொருத்தி யாகும் இந்துக்களே! நீங்கள்தற்கு நியாயங் கூறுங்கள். இந்த சந்திரமதி என்பவள் மிக்க வழகுடையவளென்று, அரிச்சந்திரனிடம் சில விபசார வியாபாரிகளாகிய தேவர்களென்னும் முனிவர் வந்து பிரஸ்தாபிக்க, அப்படியானால் அவர்களுடன் யான் கூடினா லல்லது 2.யிர்வாழ மாட்டேன் நீங்களாகிய முனிவர்களே! (பார்ப்பார்களே) இவ்விஷயத்தில் ஈடுபட்டு அவளென்னை வரிக்க சரிபடுத்துங்களென்று கால் கடுக்க மலைகளேறிச் செல்லச் சொன்னானாம். இதுதானோ இந்து முனிவர்கள் தர்மம் இப்படிப்பட்ட வேலையை இவர்களிடம் வாங்குவதுதானோ அரசரொழுக்கம். காமக் கடற்கரை யேறான் காசினிமுற்று மெப்படி யாண்டிருப்பான். கூட்டிவைக்கும் பார்ப்பார முனிவர்களின் ஊழலில் சிக்கியுள்ளவனது அரசு நீதியாயிருந்த தென் றொப்பற் கிடமில்லை. தேவேந்திரன் தன் சபையிலே, யாராவது உலகத்தில் பொய் சொல்லாதவனுண்டா என்றார். வசிஷ்டன் உண்டென்றும் கௌசிகன் இல்லை என்றும் சொன்னார்கள். இதில் ஒருவன் மெய்யன், ஒருவன் பொய்யன், உலகத்திலு மப்படியே பொய்யும் மெய்யும் கலந்துள்ளது. தேவருலகு யெப்படி சிறந்ததாகும் தேவர்களுக்கு அரசன் தேவேந்திரன் அவன் இவ்விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருப்பானா? தேவருலகிலே நடந்த குதர்க்கத்தை பூமியில் வந்த விஸ்வாமித்திரன் மாற்றி யுரைத்தானென்றால் இது