பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15) க, அயோத்திதாஸப் பண்டிதர் இந்து மத முனிவர் களின் (முறைமையோ? இவர்கள் தானோ தேவருலகம் புகுந்தோடுபவர்? விஸ்வாமித்திரன், விஸ்வநேசன், விஸ்வேசன் விஸ்வாகன் முதலிய பெயர்கள் சுதேச தெய்வத்துடையதாயிருக்க, அத்தெய்வப்பெயரை ஒரு தூர்த்தன் ஏற்றிருந்தானென்றால் அவன் சங்க மருளிய முனியாகுவானோ? ஆம் என்றால், அவன் முறை தவறாகிறதே. இவன் சில பார்ப் பார்களை யனுப்பி அரிச்சந்திரனிடம் பொன் கேட்டானாம். அந்த மூட பார்ப்பார முனிவர்களும். இவ்வளவென்று குறிக்கவில்லை சுய மரியாதையற்ற அரிச்சந்திரனு மெவ்வளவு பொன்னென்று கேட்கவில்லை. அவர்கள் வேண்டு மென்றவுடன் இவன் சரியென் றொப்பினானாம் இதுதானா அரச நீதி. விஸ்வாமித்திர னென்னு மரசன் தனது தபோ பலத்தால் பிராமண நிலையடைந்து தனது நாசியின் சுவாசத்தால் இரண்டு பெண்களை உற்பத்தி செய்தானாம். இங்ஙனம் சுக்கிலம் சுரோணிதமின்றி உற்பத்தியான தென்றல் விவேகிகள் ஏற்பதில்லை. அங்ஙனம் ஞானியாயதால் தனது சித்தி லேற் படுத்தியிருக்கவா மென்றேற்கினும் சிரேஷ்ட முற்ற ஞானியாரின் சுவாசத்தால் தோன்றியப் பெண்கள் இழிந்த குலப் பறைச்சிகளாவரோ, கறுப்பு நிறம் வாய்க்குமோ இழிந்த குலம் பறைச்சிகளாகவும் கறுப்பு நிறப் பெண்களாகவும் தோன்றியது எதார்த்தமாயின் இரு பெண்களை யீன்ற விஸ்வாமித்திரனும் பறையனன்ருே அப்பறையனை குருவாக வணங்கி பொன் கொடுப்பதாக ஒப்பிக்கொண்ட அரிச்சந்திரனும் பறை யனன்றோ பின்னும் மானமற்று சுயமரியாதையும், அடிமையற்ற புத்தியு மின்றி நாட்டுக்கு நல்லரசன் வந்தாலும் தோட்டிக்குப் புல்சுமைப் போகாதென்பது போல் தன் மனைவி மகவு தலைமேல் புல்சுமை வைத்து காசி பட்டணத்தில் அவர்களை விலைக் கூறினவனொரு பறையனன்றோ ? அப்பறையனாகும் அரிச்சந்திர னும் புல் சுமையேற்று வெட்டியானுக்கு அடிமையாகி கொடுத்த பணத்தைப் பறித்துக்கொண்ட வெள்ளியென்னும் அந்தணனும் பறையனன்றோ? இத்தியாதி உற்பவ தோற்றங்களை யுணராமல் அற்ப மதியால் பறையர்களென்னும் நூதனப்பெயரை பரவச் செய்தற்கும் அப்பெயரை ஏனையோர் இழிவாக மதித்தற்கும் இக்கட்டுக்கதை எழுதினார்க ளென்பதை எளிதிலறிந்து