பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

151



கொள்ளலாம். அதுவுமன்றி பறைச்சிகள் கேட்டக் குடையைக் கொடுக்காமல் சாக்குபோக்கு சொன்ன மன்னன் பார்ப்பான் கேட்டவுடன் கொடுத்துவிட்டது பரிசாமோ. கேட்டதைக் கொடுக்கும் மன்னன் பறைச்சிகள் கேட்ட குடையைக் கொடுக்காமல் விரட்டியது பொய்யன்று பார்ப்பானுக்குக் கொடுப்பேனென்று சொன்ன வாக்குத் தவறாமற் கொடுத்தது மெய்யே யாம். இத்தகைய மெய் பொய் வாக்கியத்தினும் பறைப்பொய், பார்ப்பாரபொய், பறைமெய் பார்ப்பாரமெய் இருக்கின்றாப்போல் இரு பறைச்சிகள் கேட்டதைக் கொடாமல் விரட்டியதை பொய்யென் றேற்காமல் பார்ப்பானுக்குக் கொடுப்பேனென்று சொல்லிக்கொடுத்ததை மெய்யென் றேற்பதினாலேயாம். பறையரென்போர்களை இழிந்தோரென வருத்துவிட்ட படியால் அவர்கள் மெய்மொழிகளும் இழிவடையும் போலும், வேஷ பிராமணர்களை உயர்ந்தோரென்று வகுத்து விட்ட படியால் அவர் மொழிவது பொய்மொழியாயினும் உயர்ந்து போம் போலும். இத்தகைய உயர்வு தாழ்வினால் பறைச்சிகள் கோரிக்கையை மன்ன னேற்காமல் பார்ப்பான் சொல்லை யேற்றிருக்கின்றான். அதுவுமன்றி தனது தேசத்தை விசுவாமித் திரனுக்குத் தாரை வார்த்துவிட்டு வெளிநக ரேகும்போது மறுபடியும் இந்நகருள் வர மாட்டேனென் றுறுதி வாக்களித்த மன்னன் பின்னும் நகருள் வந்து சேர்ந்தான். இம்மொழி பொய்யா மெய்யா வென்பதை யறிந்திலர்போலும். காரணம் மெய்யன்பத்து பொய்யன்ப திதுவென்னும் பேதமின்றி குடும்பிகளாகவும் பொருளாசை யுள்ளவர்களாகவும் மிருந்து கொண்டு தங்களைப் பிராமணர் பிராமணரென்று பொய்சொல்லி கல்வியற்றவர்களை வஞ்சித்து பொருள்பரிக்கப் பொய்யை மெய்யாகக் கூறித் திரிபவர்களாதலின் சாக்கைய வம்மிசவரிசை யோனும் புத்த பிரான் மூதாதையுமாகிய வீரவாகுச் சக்கரவர்த்தியின் பெயரை சுடலைகாக்கும் பறைய னென்று வகுத்து அப்பெயரைப் பரவச்செய்தற்கும் இழிவுகூறி வருவதற்கு மிவ்வரிச்சந்திரன் கட்டுக்கதையை ஏற்படுத்தினார்க ளன்றி பொய்மொழி ஈதென்றும் மெய்ம்மொழி யீதென்றும் உணர்ந்தியற்றினா ரில்லை. மெய்யும் பொய்யு முணர்ந் தியற்று